தமிழரின் மத வழிபாட்டுக்கு இடையூறு : இந்தியா உட்பட உலகின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் -நேரு குணரட்ணம்

தமிழர்களின் வழிபாட்டு முறையை தொடர்ச்சியாக குழப்பும் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது இடம்பெற்ற பிரச்சினைகள் குறித்து லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழர்களின் வழிபாட்டு முறை தொடர்ந்து மறுக்கப்படும் செயற்பாடு இலங்கையில் தொடரும் நிலையில், இந்த விடயங்கள் உலக பரப்பில் எடுத்துச்செல்வதன் மூலமே இதற்கான தீர்வினை பெற முடியும்.

இந்தியா இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் அதற்குரிய நகர்வுகளை தமிழர் தரப்பு உடன் செய்ய வேண்டும்.

சம்மந்தப்பட்ட தரப்புக்கு எதிராக உரிய நடவடிக்கை தடுக்க தவறினால் அதற்குரிய பொறுப்பை இலங்கை அரச தலைவரும், அரசும் ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்