தைப்பொங்கள் விழா- 2026
என். செளவியதாசன்

லகுகலை பிரதேச செயலகமும் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலம்பண்பாட்டு அறப்பணிமையம் (சுவில்) இலங்கை இணைந்து பாணமை சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலையில் இடம்பெற்ற சக்தி பொங்கல் விழாவானது லாகுகலை பிரதேசசெயலாளர் திரு ந. நவநீதரஜா அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக
அம்பாறை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக லாகுகல பிரதேசசெயலக உதவிப்பிரதேச செயலாளர் திரு க. சதிசேகரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அமைப்பின் அமபாறை மாவட்ட இணைப்பாளர் திரு ந. கிருஷ்ணலதன், மற்றும் லாகுகல பிரதேசசெயலக கலாசார உத்தியோகத்தர் திரு எஸ். குகன், பாடசாலையின் பிரதி ஆதிபர் திருமதி எஸ். விno🫂மற்றும் உத்தியோகத்தர்கள், மன்ற உறுப்பினர்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டதுடன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு பொங்களுக்கான பானை, பொங்களுக்குறிய பொருட்கள் என்பன மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்விசமூக நலம் பண்பாடுஅறப்பணிமையம் சுவீஸ் இலங்கைக்கிளையினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் அறநெறி மாணவர்களின் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகளுடன் சூரியபகவானுக்கு நன்றி செலுத்துமா பூசை வழிபாடுகளுடன் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.