கல்முனை நெற் குழுவினர் லங்கா பட்டுன விகாரை விஜயம்
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை நெற் இணையத் தளத்தினர் ஸ்தாபக தலைவர் பு.கேதீஸ் தலைமையில் திருகோணமலை லங்கா பட்டுன ( இலங்கை துறைமுகம்) விகாரைக்கு (16) வெள்ளிக்கிழமை விஜயம் செய்தனர்.
சுவிட்சர்லாந்தில் இருந்து வருகைதந்த, இயக்குனர் சபை உறுப்பினர் பாண்டிருப்பைச் சேர்ந்த இரா. விஜயகுமாரனின் ஏற்பாட்டில் இவ்விஜயம் இடம் பெற்றது.
அங்குள்ள முக்கியமான வரலாறு பற்றி அறிந்து கொண்டார்கள்.
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருகோணமலை துறைமுகம், பண்டைய காலங்களில் “லங்கா பட்டுன” என அழைக்கப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. “பட்டுன / பட்டணம்” என்பது துறைமுக நகரத்தை குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும். அதன்படி, லங்கா பட்டுன என்பது இலங்கையின் முக்கிய துறைமுக நகரம் என்ற பொருளை உடையதாகும்.
இந்த துறைமுகம் பண்டைய காலம் முதல் இந்தியா, சீனா, அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை கொண்டிருந்த கடல் வர்த்தகத் தொடர்புகளின் மையமாக விளங்கியுள்ளது. இயற்கையாகவே ஆழமும் பாதுகாப்பும் கொண்ட இந்த துறைமுகம், காலனித்துவ ஆட்சிக் காலங்களிலும் கடற்படை மற்றும் வாணிப நடவடிக்கைகளுக்கு முக்கியமாக பயன்படுத்தப்பட்டது.
இன்றைய நிலையில், லங்கா பட்டுன என அழைக்கப்பட்ட திருகோணமலை துறைமுகம், இலங்கையின் தேசிய பாதுகாப்பு, சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.





