அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் : முதுகெலும்பில்லாத தமிழ் கட்சிகளும்! -கேதீஸ்-

கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்களின் அரச சேவைகளை பெறும் அடிப்படடை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால் திட்மிட்டு பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு வருவதுடன், அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் வருகின்றன.

பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பெறுவதற்கும் இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அரச அதிகாரங்களை பெற்று மக்களுக்கான அரசு சேவையை பெறுவதற்கு முடியாமல் கடந்த 30 வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள் இப் பிரதேச மக்கள்.

.கடந்த கால யுத்த சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்திய மாற்று இன அரசியல்வாதிகள் கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்களின் அரச சேவைகளைமுடக்கி வந்ததோடு மாத்திரமல்லாது காணி ஆக்கிரமிப்பு, வள ச்சுரண்டல்களையும் செய்து அனுபவித்ததன் ருசி இன்றும் அவ்வாறான சூழ்ச்சிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.

இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை பெறுவதற்குரிய சகல உரிமைகளும் நியாயங்களும் இருந்தும் கூட அவற்றை பெறுவதற்கு போடப்படும் தடைகளை உடைக்க முடியாமல் இருக்கின்றமையானது. தமிழ் அரசியல்வாதிகளின் முதுகெலும்பில்லாத தனத்தை வெளிப்படுத்துகின்றது என்று கூறினால் மிகையல்ல.

இத்தனை தமிழ் கட்சிகள் அரசியல்வாதிகள் இருந்தும் எந்த பலனும் இல்லாத கையறு நிலைமை என்பது கேவலம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கான அதிகாரங்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றது..

இந்தப் பிரதேச மக்கள் புதிதாக இன்னொரு இனத்திடம் இருந்து எதையும் கேட்கவில்லை இருக்கின்ற தங்களுக்குரிய அதிகாரங்களை வினைத்திறனான சேவைகளை பெற்றுத் தருவதற்காகவும் தங்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும் கோருகின்றார்கள்.

சில தினங்களுக்கு முன்பு கூட வடக்கு பிரதேச செய்வதற்கு எதிராக இன்னும் ஒரு சூழ்ச்சி இடம் பெற்றுள்ளது.

ஒரு பறவையின் இறக்கைகளை பிடுங்குவது போன்று ஒவ்வொரு அதிகாரங்களையும் பிடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இழந்தவற்றை மீட்பதற்கு முதல் இருப்பதை காப்பாற்றக் கூட வக்கில்லாத கையறு நிலை தமிழ் அரசியல் தலைமைகள் இருக்கின்றது என்பது ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விடயம்

moha.gov.lk என்ற அமைச்சின் இணையத்தளத்தில் இருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் 19பிரதேச செயலகங்கள் காட்டப்பட்டுள்ளது.அத்துடன் பாண்டிருப்பு -1 கிராம உத்தியோகத்தர் பிரிவு கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுடன் சேர்க்கப்பட்டு 30 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் காட்டப்பட்டுள்ளன .

ஒரு பறவையின் இறக்கைகளை பிடுங்குவது போன்று தொடர்ச்சியாக கல்முனை வடக்கு பிரதேச செய்லகத்தின் ஒவ்வொரு உரிமையும்,, அதிகாரங்களும், வளங்களும் பிடுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாரிய இந்த அநியாயங்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற போது அவற்றை தடுத்து நிறுத்த வக்கில்லாத தமிழ் அரசியல் தலைவர்கள் கண்மூடிக் கொண்டிருப்பது மிகவும் வேதனையான விடயம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் – கல்முனை, பாண்டிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணை, துரைவந்தியமேடு ஆகிய ஏழு கிராமங்கள் உள்ளன,
இதில், 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக பௌதிக வளம், ஆளணிகளுடன் நிரந்தரமான கட்டிடத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இயங்கிவருகின்றது.

கல்முனை நகரில் அமைந்திருந்த மக்கள் வாழ்ந்த சிங்கள வாடி எனவும் அழைக்கப்பட்ட கிறவல் குழி அரச காணி, இலங்கையின் நடைமுறைக்கு அப்பால் பாகிஸ்தான் தலைநகரின் பெயரான இஸ்லாமபாத் என அழைக்ப்பட்டு தனி முஸ்லிம் குடியிருப்பு உருவாக்கப்பட்டது.

சுனாமியின் பின்னர் அங்கு கட்டப்பட்ட தொடர்மாடி குடியிருப்பும் தனியாக முஸ்லிம்களுக்கே வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறாக பல அநீதிகள் கல்முனை தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன இப்போதும் தொடர்கிறது.

1993 ஆம் ஆண்டு அமைச்சரவை 29 உப பிரதேசங்களை தரமுயர்த்த அங்கிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தவிர, ஏனைய 28 பிரதேச செயலகங்களுக்கு மாத்திரம் காணி நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டன. என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 30 வருடங்கள் தாண்டி தொடரும் கல்முனை தமிழருக்கு எதிரான அநீதிக்கு இனியும் தாமதியாமல் தீர்வு உடனடியாக கிடைக்க அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் கல்முனை தமிழருக்காக கட்சி பேதங்களை மறந்து அவர்களின் அடிப்படை உரிமையை பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டும். இன்னும் மௌனமாக இருந்தால் வரலாறு அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் கல்முனை பிரதேச தமிழ் மக்களுக்கு செய்த வரலாற்று தவறு மாறாத வடுவாக இருக்கும்.