மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் வீதிகளுக்கு பெயர்ப்பலகை நடும் நிகழ்வு.

(கலைஞர்.ஏ.ஓ.அனல்)

மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிராமத்தின் வீதிகளுக்கான பெயர்பலகை நட்டு திரை நீக்கம் செய்து வைக்கும் நிகழ்வு மற்றும் பொங்கல் விழா என்பன 2024/02/11ம் திகதி செல்வன் ந.அனுஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஈசான சிவாச்சாரியார் க.கு.மோகாணந்தம் அவர்களும், அதிதிகளாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார், பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் ச.தேவதாஸ், சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர் .

மகிழூர்முனை ஸ்ரீ மண்டபத்தடி வலம்புரி விநாயகர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கிராமிய நடனங்கள் , இளைஞர் கழக உறுப்பினர்களினால் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான சமூக சீர்திருத்த நாடகம் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளும் குறித்த நிகழ்வில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது 12 வீதிகளுக்கான பெயரிடலில் முதல் கட்டமாக 7 வீதிகளுக்கான பெயர்பலகை நடப்பட்டு திரை நீக்கம் செய்யப்பட்டதமை குறிப்பிடத்தக்கது.