நற்பிட்டிமுனை சமாதானப் பாலர் பாடசாலையின் 29 ஆவது வருடாந்தக் கலைவிழா இன்று 10.02.2024 ஆம் திகதி கமு /கமு / சிவசக்தி மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியர் திருமதி கே. விஜயராணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதிப் பதிவாளர் திரு.சஞ்சீவி சிவகுமார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இவ்விழாவின் விசேட அதிதிகளாக சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் திரு. எஸ். தனராஜ் , அல்-அக்ஸா மகாவித்தியாலய அதிபர் ஜனாப். எம். எல்.பதியுதீன் மற்றும் நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலய , பத்திரகாளியம்மன் ஆலய செயலாளர் திரு. எல். பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக அஷ்ஷெய்க்.ஜெ. எம். ரிஸான்(ஹாமி), தலைவர் நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளிவாயல் அவர்களும் நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலய , பத்திரகாளியம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சுதர்சன் குருக்களும் கலந்து சிறப்பித்தனர்.

அதிதிகளின் சிறப்புரைகள், மாணவர்களின் கலை நிகழ்வுகள், என்பவற்றுடன் மாணவர்கள் பரிசில்களும் விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.