வாய்வழி புற்றுநோய் OPMD ஸ்கிரீனிங் திட்ட இலவச நடமாடும் சேவை!

அபு அலா, நூறுல் ஹுதா

உலக பல்வலி தினத்தையொட்டி “வெற்றிலை, புகை பிடித்தலைத் தவிர்த்து வாய்ப்புற்று நோயினைத் தடுப்போம்” எனும் தொனிப் பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குற்பட்ட ஆலையடிவேம்பு கண்ணகிபுர கிராமத்தில் வசித்து வருகின்ற மக்களின் வாய்வழி புற்றுநோய் ஓ.பி.எம்.டி (OPMD) ஸ்கிரீனிங் திட்ட நடமாடும் இலவச பல் வைத்திய சேவையுடன் விழிப்புணர்வு நிகழ்வும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸதீனின் அறிவுரை மற்றும் ஆலோசனைக்கமைவாக, கல்முனை பிராந்திய பல் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.சறூகின் தலைமையில் கீழ், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி ஏ.பிரசாந்தினி மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் இச்சேவையை முன்னெடுத்தனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் அவர்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறான இலவச மருத்துவ நடமாடும் சேவைகளையும், பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகளை கடந்த பல வருடங்களாக
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துச் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.