பெரியநீலாவணை பிரபா

பெரியநீலாவணை LITTLE FRIEND’S பாலர் பாடசாலை மாணவர்களின் 2023 க்கான வருடாந்த சிறுவர் விளையாட்டு நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 07/02/2024 சிறப்பாக இடம்பெற்றது.

பாலர் பாடசாலை தலைமை ஆசிரியர் திருமதி ரவிதரன் தாரணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், தேசிய கீதம் இசைத்தல் என்பனவற்றுடன் தொடர்ந்து சிறுவர்களின் விளையாட்டு மற்றும் பரிசளிப்பு , சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் வினோத உடைப் போட்டியும் பெற்றோர்களுக்கான விளையாட்டு நிகழ்வும், அதிதிகள் உரை என்பவும் இடம் பெற்றன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு. T.J.அதிசயராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் இந் நிகழ்வின் அதிகளாக ஏ.எம்.ஆயிஷா ( முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஏ.கே.ஹனா (முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்) திருமதி ஜெசிக்கா ஜோன் (மூத்த முன்பள்ளி ஆசிரியை) திருமதி ஆன் செரோன் ( கல்முனை வடக்கு முன் பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவி ) திரு.தி.சுரேஸ்குமார்(காவேரி விளையாட்டுக்கழக தலைவர்) மற்றும் காவேரி கல்விசார் ஒன்றிய பொறுப்பாளர் திரு.மனோ மற்றும் திரு.ஏ.ரவிதரன் (LITTLE FRIEND’S PRE SCHOOL DIRECTER) திரு எஸ்.மதன் (RASMIKA DISTUBUTER) திரு பா.கோகுலதாஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிகளை திரு வ.கார்த்திக் தொகுத்து வழங்கியிருந்தார்.