கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் மலேசியாவிலும் ஆன்மிகப் பணிக்காகப் பயணம்.

கடந்த வாரம் இவ்வமைப்பின் தலைவர் சிவஸ்ரீ பிரமீன் சர்மா அவர்கள் மலேசியா பயணமாகியிருந்த நிலையில் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் தலைவருடன் ஒருங்கிணைப்பாளர் சிவத்திரு.தாமோதரம் பிரதீவன் அவர்களும் இணைந்துகொண்டார்.
25/01/2024.வியாழக்கிழமை மலாக்கா நானிங் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் விஷேட ஆன்மீக சொற்பொழிவு இடம் பெற்றுள்ளதோடு

26/01/2024.வெள்ளிக்கிழமை சிறம்பான் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் வாழ்வியல் சிந்தனைகள் தொடர்பில் சொற்பொழிவு இடம் பெற உள்ளது

27/01/2024.சனிக்கிழமை இவ்வாலயத்தில் மாலை .04.30 மணி முதல் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான பயிற்சியும் இடம்பெறவுள்ளது.

28/01/2024 ஞாயிற்றுக்கிழமை.
காலை 07.00 மணிக்கு மலாக்கா தம்பேன் ஸ்ரீ செல்வ கேணேசர் ஆலயத்தில் ஆன்மீக சொற்பொழிவு இடம் பெற உள்ளது.

மலக்கா தம்பேன் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் மாலை 07.00 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு இடம் பெற உள்ளது

29/01/2024. திங்கட்கிழமை மலேசியா ஈப்போ குருவிமலை ஸ்ரீ செல்வ கணபதி ஆலயத்தில் மாலை 07.00 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு இடம் பெற உள்ளது

30/01/2024 செவ்வாய்க்கிழமை மலாக்கா R.D. சண்முகம் குருக்கள் தலைமையில் ஆன்மீக சொற்பொழிவு இடம் பெற உள்ளதோடு விஷேட ஆன்மீக மற்றும் சைவ தமிழ் வழர்ச்சிக்கான சந்திப்புகளும் இடம்பெறவுள்ளது.

01/02/2024
02/02/2024
சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஆன்மீக சுற்றுலா பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தரிசனம் இடம்பெற்று இனிதே நிறைவுபெறும்.