இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பவதாரிணி அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு லங்கா மருத்துவமனைக்கு இளையராஜா நேற்று உடனே விரைந்தார்.

இலங்கையில் அவர் பித்தப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அது கடைசி நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று மாலை 5:20 மணியளவில் பவதாரிணி உயிரிழந்ததாகவும் அவரது உடலை இன்று சென்னை கொண்டு செல்வதற்கா நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு லங்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பில் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இளையராஜா, மருத்துவமனைக்கு உடனே சென்றிருந்தார்

.

இவர் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரின் அன்பு சகோதரி யும், கங்கை அமரனது பெறாமகளும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரது உறவினருமாவார்.