கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இருதயநோய் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் Dr. K. D.லொகுகெடகொட அவர்களின் பிரியாவிடை நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இருதய நோய் சத்திர சிகிச்சை நிபுணர் Dr. K. D. லொகுகெடகொட அவர்கள் இடமாற்றம் பெற்று செல்வதனையிட்டு இப்பிரியாவிடை நிகழ்வானது 2024.01.16 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி Dr. இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தலைமையுரை மற்றும் வரவேற்புரை வைத்தியசாலையின் பணிப்பாளரினால் நிகழ்த்தப்பட்டது. மேலும் வைத்திய நிபுணர்களினால் இருதய நோய் சத்திர சிகிச்சை நிபுணர் Dr. K. D. லொகுகெடகொட அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதிப்ணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்களினால் Dr. K. D. லொகுகெடகொட அவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது. மேலும் நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் Dr. ஜெ. மதன், மகப்பேற்று வைத்திய நிபுணர் Dr. H. M. ரசீன் மொகமட், பொது வைத்திய நிபுணர் Dr. M. N. M. சுவைப், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் Dr.S. N.ரொஷாந்த், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பொறுப்பு வைத்தியர் Dr. B. சுரேஷ்குமார், சத்திரசிகிச்சைகூட பொறுப்பு வைத்தியர் Dr. M. S. A. ஷிரோஷான், வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்தியர் Dr.R. கணேஷ்வரன், கணக்காளர் திரு.M. கேந்திரமூர்த்தி, தாதிய பரிபாலகர் திரு. N.சசிதரன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. T. தேவஅருள் வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவு வைத்திய அதிகாரிகள், பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். நிகழ்ச்சியினை திட்டமிடல் பிரிவு பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திரு. P. செல்வகுமார் தொகுத்து வழங்கியிருந்தார்.