காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு

( வி.ரி. சகாதேவராஜா)

காரைதீவு  பிரதேச சபையின்   04 ஆவது சபையின்  கன்னி அமர்வு    புதன்கிழமை (16) புதிய தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

சபா மண்டபத்தில்  உப தவிசாளர் முஹம்மது ஹனீபா முகம்மது இஸ்மாயீல்  உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது   மத அனுஸ்டானம்  இடம்பெற்ற பின்னர்  தவிசாளர்  உரையுடன் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் அறிமுகம் மற்றும் உரை  என்பன தொடர்ச்சியாக  இடம்பெற்றன.

நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில்  சுப்பிரமணியம் பாஸ்கரன் ( முன்னாள் உறுப்பினர்) வை.கோபிகாந்( முன்னாள் தவிசாளர்)  சின்னத்தம்பி சிவகுமார் , கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( முன்னாள் தவிசாளர்) ஆகியோரும் , மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் அபூபக்கர் பர்ஹான்( தேசிய மக்கள் சக்தி) மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் எம்.எச்.எம்.இஸ்மாயில்( மு.கா.) (முன்னாள் உறுப்பினர்) மற்றும் மாவடிப்பள்ளி வட்டாரத்தில் ஏஆர்எம்.ஹில்மி( அ.இ.ம.காங்கிரஸ்) ஆகியோர் முதல் பட்டியலில்  தெரிவாகியிருந்தார்கள்.

 சபைக்கு 04 உறுப்பினர்கள் பட்டியல் முறையில் தெரிவானார்கள்.

தேசிய மக்கள் சக்தியின் இரு பெண்கள் கிருஷ்ணபிள்ளை செல்வராணி மற்றும் சவுந்தரம் சுலஸ்தனா மற்றும் மு.கா சார்பில் எம்என்எம்.றனீஸ்( முன்னாள் உறுப்பினர்) மற்றும் சுயேச்சை குழு தலைவர் ஏஎம்.ஜாகீர்( முன்னாள் உப தவிசாளர்) ஆகியோர் தெரிவானார்கள்.

இம்முறை இரண்டு பெண் உறுப்பினர்கள் பட்டியலில் தெரிவானார்கள்.இதற்கு முன்னர் ஒரேயொரு பெண் உறுப்பினர் எஸ்.ஜெயராணி மட்டும் சபையை அலங்கரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.