கிழக்குமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 2024ம் ஆண்டுக்காண பொங்கல் விழா நிகழ்வுகள் பிரமாண்ட ஏற்பாடுகளுடன் கடந்த 4 நாட்களாக திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் இறுதி நிகழ்வுகள் சிறம்பாக இடம்பெற்று வருகிறது.

இவ் வருட கிழக்குமாகாண பொங்கல் நிகழ்வில் இலங்கையில் வரலாறுகாணாத ஜல்லிக்கட்டு, படகோட்டப்போட்டி நடைபெற்றது குறிப்படத்தக்கது.

இன்றைய தினம் 1000ம் பானைகள் பொங்கப்படும் பொங்கல் போட்டி, மற்றும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான குழு ரீதியான கோலப்போட்டி மற்றும் சிலம்பம் போட்டி என்பன இடம்பெறுகின்ற வகையில் மேலும் ஒரு வரலாற்று சாதனை நிகழ்வாக 1500 பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது. இந் நடன ஆற்றுகை நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்ற து.