திருமூலர் சைவத் தமிழ் எழுச்சி ஊர்வலம்!


இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களில் 18 சித்தர்களின் திருவுருவச் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் தமிழகரன்சனாவின் முயற்சியினால் இந்து கலாசார திணைக்களத்திற்தின் ஆதரவுடன் இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜின் தலமையின் கீழ் சுவிஸ் அருள்மிகு சிவன் ஆலயத்தின் சைவத்தமிழ் சங்கத்தினரின் ஏற்பாட்டில் திருமூலர் திருவுருவச் சிலைக்கான கண் திறக்கும் அங்குராப்பணம் மற்றும் ஊர்வலம் ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றன.

அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜி, அக்கரைபற்று கலாசார உத்தியோகத்தர்,
தமிழகரன்சனா ஆகியோர் ஒழுங்குபடுத்தலின் கீழ் அக்கரைப்பற்று விபுலாநந்தர் சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.


சுவிஸ் அருள்மிகு சிவன் ஆலயத்தில் பல வருடங்களாக இறை பணி செய்து ஈசன் அடி சேர்ந்த ரகுநாதன் குருக்கள் நினைவாக சிவன் ஆலய சிவகாம நிதி
சிவஸ்ரீ நயினை வாம தேவ கைலாஸநாத குருக்கள் நிதி பங்களிப்பில் திருநாமசிங்கம் அவர்களின் நிதி ஒழுங்கமைப்பில் இத் திருமூலர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.


திருமூலர் சிலையின் சைவத்தமிழ் எழுச்சி ஊர்வலம் அக்கரைப்பற்று கல்வி வலயம் ,மற்றும் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்களினால் பக்திபூர்வமாக வரவேற்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள்,
கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் சொற்பொழிவுகளுடன் நிகழ்வு நடைபெற்றது.


நான்கரை அடி உயரமும் தொல்லாயிரம் கிலோ எடையும் கொண்ட கருங்கல்லினால் நிறுவப்பட்டுள்ள திருமூலர் சிலையானது கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலயத்தின் கும்பாவிஷேக நிகழ்வில் பிரதிஷ்டை செய்து வைக்கப்படவுள்ளது என அம்பாறை மாவட்ட இந்து கலாசார திணைக்கள வளவார் தமிழகரன் சனாதனன் தெரிவித்தார்.