இமயமலை பிரகடனம் வெளிநாட்டு தூதுவர்களிடமும் கையளிக்கப்பட்டன!

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் ஆகியோர் இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தை கையளித்துள்ளனர்.

குறித்த சந்திப்பானது நேற்று (14.12.2023) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

விசேட வேலைத்திட்டம்
இதன் போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், பிரிட்டன் தூதுவர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோர்களை அவர்கள் சந்தித்து தமது விசேட வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.