சர்வதேச .முதியோர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் அனைத்திலும் இருந்து சிறந்த கலைஞர்கள், சிறந்த சமூக சேவையாளர்கள் மற்றும் கவிதை பாடல்கள் போன்றவற்றில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்கள் ஆகியோரை தெரிவு செய்து அவர்களுக்கான பரிசில்களையும்,பாராட்டுக்களையும் விருதுகளையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சமூகசேவை திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் இளங்குமணணின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் தென் ஆபிரிக்க இலங்கைக்கான உயர்ஸ்தானிகரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை வடக்கு பிரதேசத்தில் சிறந்த சமூக சேவையாளராக கலாபூஷணம் பல்துறை வித்தகர் கல்முனை நெற் குழுமத்தை சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் கா. சந்திரலிங்கம் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.