“வேற்றுமையில்லா இரத்தத்தை தானம் செய்து மனிதத்தை போற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்த பற்றாக்குறைக்கு உதவும் நோக்கில் ஓந்தாச்சிமடம் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் 19/11/2023 அன்று மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

இந்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு தங்களது பெறுமதி மிக்க இரத்தத்தை தானமாக வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி ஊழியர்களுக்கும், இந் நிகழ்வை திறன்பட நடாத்த உறுதுணையாக இருந்த கழக உறுப்பினர்களுக்கும்,ஓந்தாச்சிமடம் ஶ்ரீ விநாயகர் மகா வித்தியாலய நிருவாகத்தினருக்கும்,இந்த இரத்த தான நிகழ்வை நடாத்த எமக்கு பக்க பலமாக இருந்த எமது அனுசரணையாளர்களான K.V மரக்கறி விற்பனை நிலையம் ஓந்தாச்சிமடம்,J.K Stores ஓந்தாச்சிமடம்,D.S நகைத்தொழிலகம் ஓந்தாச்சிமடம் மற்றும் திரு.அ.நீதிராஜா ஆகியோருக்கு கழகத்தினர் நன்றிகளை தெரிவித்தனர்.

நடந்துமுடிந்த இரத்ததான நிகழ்வின் சில பதிவுகள்..!