2024 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் (வரவு-செலவுத் திட்டம்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், இன்று (13) நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் என்ற வகையில் வரவு-செலவுத்திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்.
வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம், செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 21 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும்.

வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகி டிசெம்பர் 13ஆம் திகதி புதன்கிழமை வரையிலும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து 19 நாட்கள் தொடர்ச்சியாக விவாதம் நடைபெறும். டிசெம்பர் 13ஆம் திகதி மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.