இரா. சம்பந்தன்,பதவி விலகுவது நல்லது என்கிறார் சுமந்திரன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தனது நாடாளுமன்ற பதவியை துறப்பது நன்று என்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போது இரா சம்பந்தனின் பதவி துறப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு சுமந்திரன் எம்.பி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக இரா சம்பந்தன் அவர்களுக்கு தனது எம்பி பதவியூடாக செயற்
படுவதில் சிரமம் காணப்படுவதனால் எம்பி பதவியை துறந்து வேறு ஒருவருக்கு வழி விடுவதின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இரா சம்பந்தன் அவர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு கூட முடியாத நிலைமை காணப்படுகிறது நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபெற்றுவது மிக குறைவாக உள்ளது அவரது உடல் நிலை ஒத்துழைக்குதில்லை.இதனால் அவர் பதவியை துறந்து ஓய்வு எடுப்பது நல்ல விடயம் இது எனது தனிப்பட்ட கருத்து எனக் கூறியுள்ளார்.

You missed