தமிழ் சினிமாவின் இன்றைய முதல் தர நடிகருடன் ஒரு உச்ச நட்சத்திரத்துடன் சேர்ந்து படத்தில் அதிக காட்சிகளில் பயணம் செய்து நடித்த ஒரு ஈழத்து பெண் நடிகை என்றால் அது ஜனனி தான்.

அவ்வளவு எளிதாக அமைந்து விடுவதில்லை இந்த வாய்ப்புகள் எல்லாம் அதுவும் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த நடிகை த்ரிஷா என்று சொல்லி அந்த த்ரிஷாவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் அமைந்திருக்கின்றது..சினிமா மீது கொண்ட மோகத்தினால் இலங்கையில் இருந்து சென்று சென்னையில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் பல பேர் அங்கே காத்திருக்கின்றார்கள் சினிமாவை காதலித்து இப்போதும் தமிழ் நாட்டு இளைஞர் யுவதிகளே சின்னத்திரை பெரிய திரை வாய்ப்பிற்காக கோடாம்பக்கத்தில் அலைந்து திருகின்றார்கள் அப்படி பார்க்கையில் ஜனனிக்கான இந்த வாய்ப்பு ஒரு வரமே குறுகிய காலத்தில் அதுவும் இளைய தளபதியுடன் த்ரிஷாவுடன் ஒன்றாக அதிக காட்சிகளில் பயணம் செய்தது.திரையில் மட்டுமே பார்த்து கொண்டாடிய உச்ச நட்சத்திர திரை பிரபலங்களுடன் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் கனவு நனவாவது அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் வாய்க்காது

வாழ்த்துக்கள் கற்றுக் கொள் பயணம் செய் நேர்மறைகளை எதிர்மறைகளை ஏற்றுக்கொண்டு

-Niro-