தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார்.
சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்
