சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திர காளி அம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீடு

கிலசன்

அமரர் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையில் சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திரகாளி அம்மன் மீது பாடப்பட்ட பக்திப் பாமாலை இறுவெட்டு வெளியீடு
ஆலயத்தின் தலைவர்‌ சுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வே.ஜெகதீஸன் அவர்களும் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஆலய பூசகர் ஆலய பரிபாலன சபையினர் ஏனைய ஆலயங்களின் பரிபாலன சபையினர் அறக்கட்டளை நிதியத்தின் குடும்பத்தினர் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இளம் கலைஞர் விருது பெற்ற பாடலாசிரியர் அருளானந்தம் சுதர்சன் அவர்களின் வரிகளில் 10 பாடல்கள் அருள்தாசன் நிலுக்ஷனின் இசையில் றிஜோயின் இசைக்கலவையில் சுலக்ஷி சபேசன் ப்ரணிதா யசோமிதா ரிஷிகேசவன் மற்றும் ஆத்திரேயாவின் குரலில் பாடப்பட்வையாகும்.

அம்மன் ஆலயத்தின் வரலாறு மற்றும் மகிமைகளை சொல்லும் விதமாக இந்த பாடல்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கான முழுமையான நிதி அனுசரணையையும் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியம் பொறுப்பேற்றதுடன் பாடல் உருவாக்கத்துடன் தொடர்புடைய சகல கலைஞர்களையும் அவர்கள் கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You missed