மட்டக்களப்பு ஓவியத் திருவிழாவில் கலைஞர்.ஏஓ.அனலின் ஓவியங்கள்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகமும் இணைந்து நடாத்திய கிழக்கின் ஓவியத்திருவிழா அண்மையில் (21) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் கிழக்கு மாகாண பண்பாடு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு நவநீதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த ஓவியத்திருவிழாவானது 21,22,23 ஆகிய மூன்று தினங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு ஓவியங்கள் சிற்பங்கள் மற்றும் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இக்காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்களுள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கலைஞர்.ஏஓ.அனல் அவர்களது படைப்புக்களும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.