கடந்த வாரத்தில் பிரித்தானிய ஊடகமான சனல் -4 எனும் செய்தி சேவை ஊடாக பிள்ளையான் தொடர்பிலும் ஐ எஸ் ஐ எஸ் தாக்குதலின் பின்னணி தொடர்பிலும் ஆசாத் மௌலானாவால் கருத்து தெரிவிக்கப்பட்டதன் பின்னர் தற்போது பிள்ளையான் அவர்களின் முறைப்பாட்டினால் பலர் கொழும்பு பயங்கரவாத ,குற்றபுலனாய்வு பிரிவு என அழைக்கப்படுகின்றனர் என தெரிவைக்கப்படுகிறது.

இந்த வாரத்தில் மாத்திரம் இருவர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு பிரிவினருக்கு பிள்ளையான் அவர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டு அமைய விசாரணை செய்யப்பட்டதாக அவர்களால் சமூக வலைத்தளத்திலும் மற்றும் மக்கள் மத்தியிலும் பேசு பொருளாகி உள்ளது.

யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகத்தின் குரல்வளை நசிக்கப்படுவதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் விமர்சனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் மக்களின் கருத்து அடக்கி ஆளும் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைக்க பிள்ளையான் எனும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் செயல்படுவதாகவும் அதன் ஒரு அங்கமாக பொலிஸ் மா அதிபரிடம் என்னை விசாரணைக்கு உட்படுத்தும்படி நேரடியாக தெரிவித்தாகவும் குறிப்பிடப்பட்டது. தொடர்ந்தும் இவ்வாறான செயல்கள் சமூகத்தின் மத்தியில் சேவையாற்ற விடாது தடுக்கும் முயற்சியா என்று சந்தேகம் உள்ளது.

இவரின் மீது வைக்கப்படும் கடந்த கால குற்றச்சாட்டுகள் மற்றும் இவரின் இவ்வாறான செயல்பாடுகள் ஊடாக நாம் பல்வேறு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுமா என்று சந்தேகம் உள்ளது.
மக்கள் சேவைக்காக வந்த நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை இருப்பினும் இவ்வாறான எங்கள் செயல்பாடுகளை அரச பொறிமுறைகளை கொண்டு அடக்கும் செயல்பாட்டை சிவனேசத்துரை சந்திரகாந்தன் நிறுத்த வேண்டும் ஜனநாயக நடைமுறைக்கு வழி விட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேற் சொல்லப்பட்ட நபர்கள் மற்றும் பலர் இவ்வாறான அச்சுறுத்தலுக்கும் அசௌகரியத்துக்கும் உட்பட்டு வருகின்றனர் அரசியல்வாதிகள்,சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரும் தொடர்ந்து செயலாற்ற முடியாத இருண்ட யுகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படுமா என்பது நெடிய வினாவாகவே தொக்கி நிற்கின்றது

You missed