நன்னடத்தை அலுவலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டி

கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி.றிஸ்வானி றிபாஸ் அவர்களின் ஆலோசனைக்கமைவாக, கல்முனை நன்னடத்தை அலுவலகத்தின் சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.சி.சிவகுமார் அவர்களின் தலைமையின் கீழும் கல்முனை நன்னடத்தை அலுவலகப் பொறுப்பதிகாரி திரு. எம்.சீ.எம்.இஸ்ஹாக் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் கல்முனை நன்னடத்தை பிரிவின் கீழ் உள்ள கல்முனை மெதடிஸ்த சிறுமியர் இல்லம், கல்முனை ஜேசு ஜீவிக்கிறார் சிறுமியர் இல்லம், பெரியநீலாவணை ஹேமன்ஸ் சிறுமியர் இல்லம் மற்றும் அக்கரைப்பற்று நன்னடத்தைப் பிரிவில் இயங்கும் அம்மன் சிறுமியர் இல்லம் என்பவற்றுக்கிடையிலும்
அக்கரைப்பற்று
விபுலானந்தா ஆண்கள் இல்லம் சம்மாந்துறை சீர்பாததேவி ஆண்கள் இல்லம் என்பவற்றுக்கிடையிலும் கிரிக்கட் சுற்றுப் போட்டி ஒன்று கடந்த 2023.09.16 ஆம் திகதி கமு/ உவெஸ்லி உயர்தர பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்கரைப்பற்று அம்மன் சிறுமியர் இல்லம், விபுலானந்த ஆண்கள் இல்லம் என்பன. வெற்றியை தனதாக்கிக் கொண்டன. இதில் சம்மாந்துறை நன்னடத்தை அலுவலகப் பொறுப்பதிகாரி திரு. த.மதியழகன் மற்றும் கல்முனை நன்னடத்தைக் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்தப் போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகள் சிறுவர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 2023.10.01ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.