கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 2023.09.12 ஆம் திகதியன்று லண்டன் “Elderly King George” வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் Dr. காந்தா நிரஞ்சன் அவர்களினால் நான்கு இலட்சம் (4 00,000/=) பெறுமதியான நிறை அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இவ் நிறை அளவிடும் இயந்திரமானது பாரிசவாத நோயாளிகளின் நிறையினை படுக்கையுடன் சேர்த்து அளவிடக்கூடியதாகும். அத்துடன் பாரிசவாத நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்தின் அளவானது அவர்களின் நிறையினை கருத்தில் கொண்டே கொடுக்கப்படுகிறது. எனவே இதன் தேவை கருதி பாரிசவாத சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் Dr. N. இதயகுமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா. முரளீஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டிலும் இவ் நன்கொடையானது அன்பளிப்பு செய்யப்பட்டது. இவ் கையளிப்பு நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் Dr. J. மதன் அவர்களும் பொது வைத்திய நிபுணர்களான Dr. N. இதயகுமார் மற்றும் Dr. M. N. M. சுவைப் அவர்களும் தாதிய பரிபாலகி Mrs. L. சுஜேந்திரன் வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் திரு. T. தேவஅருள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

You missed