இன்று (30)மன்னார் நகரில்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் மாபெரும் போராட்டம்.

ஒவ்வொரு வருடமும் சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 இன்று நடாத்தப்படும் இப் போராட்டமானது ஒவ்வொரு வருடமும் ஒரு மாவட்டத்தில் நடாத்தப்படும் அதன்படி யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாரை மாவட்டங்களைத் தொடர்ந்து இம்முறை மன்னார் மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ளது,

மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் இருந்து ஆரம்பமாகி மன்னார் நகரசபை மைதானம் வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில்
எம் உறவுகள் மதகுருமார்கள் தேசியப் பற்றாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல்வாதிகள் வர்த்தகர்கள் வாகன சாரதிகள் விளையாட்டுக் கழகங்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்ஙப்பட்ட
உறவுகளின் சங்கம்