ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க, கடந்த வருடம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி இந்த விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளார். அமைச்சர்களான அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.

மிகவும் முக்கியம் வாய்ந்த சந்திப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You missed