கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமான ஒன்று என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரித்தது இன்று வரை தொடர்கின்றன.

இந்த நிலை அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தொடரலாம் என்று கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாததுடன், அது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, அதிகரித்துள்ள கோழி இறைச்சியின் விலை அடுத்த சில வாரங்களில் குறையலாம் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படவில்லை என அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

You missed