பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் புதிய நிருவாகம் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் இன்று 2023.05.27 ஆந் திகதி மு.ப 10.00 மணிக்கு பாண்டிருப்பு நூலகத்தில் தலைவர்: திரு.மு.சுவேந்திரராஜா (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்

புதிய தலைவராக பிரபல எழுத்தாளர் திரு. உமா வரதராஜன் அவர்களும் செயலாளராக டாக்டர்.திருமதி. புஸ்பலதா லோகநாதன் அவர்களும்
பொருளாளராக திரு.சீ.திவாகரன் அவர்களும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். உப தலைவராக. திரு. பா.செ.புவிராஜா அவர்களும்
உப செயலாளராக திரு.சிவ.வரதராஜன் அவர்களும் தெரிவாகியிருந்தனர்.

செயற்குழு உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
திரு.த. இராமநாதன்
திரு. ஜெ.அனேஜ்
திரு. க.பிரகலதன் (சரவணாஸ் நகை மாளிகை உரிமையாளர்)
திரு. கு.இராஜேஸ்வரன்
திரு.த.பரணீதரன்
திரு.ந.சங்கீத்
திரு.கு.ரமேஸ்
திரு.பு.கேதீஸ்
திரு.பு.வசந்தன்
திரு.ரா.ரகு

கணக்காய்வாளர்களாக திரு.க.லிங்கேஸ்வரன் (கணக்காளர்) அவர்களும்
திரு.சீ.தர்சன் (கணக்காய்வாளர்) அவர்களும் நியமிக்கப்பட்டார்.

அமைப்பின் கௌரவ ஆலோசகர்களாக, டாக்டர்.திரு.ந.ரமேஸ் அவர்களும் எழுத்தாளர்.திரு. சபா சபேஷன் அவர்களும் ஓய்வு பெற்ற அதிபர்களான திரு.மு.சுவேந்திரராஜா,
திரு.சி.புனிதன் ஆகியோரும்
தெரிவு செய்யப்பட்டனர்.

75 வருட வரலாற்றைக் கொண்ட இந்த சனசமூக நிலையம் நூலக சேவை, கலை, இலக்கிய ஆர்வம், சுற்றுச் சூழல் தொடர்பான அக்கறை, கிராமத்துக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பெறுவதில் முனைப்புக் காட்டுதல், கல்வி, விளையாட்டுத் துறைகளில் பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்த கரிசனை போன்ற விடயங்களில் தன்னார்வ பங்களிப்புக்களை நல்கி வருகின்றது.

கடந்த கொரோனா அச்ச சூழ்நிலை மற்றும் அதை அடுத்து வந்த பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இந்த அமைப்பின் செயற்பாடுகள் கடந்த இரண்டு வருடங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்ததுடன் இதனால் நடாத்தப்பட்டு வந்த நூலகமும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதனால் நூலகத்தை மீண்டும் இயக்குவதற்கான தீர்மாளம் சபையில் எடுக்கப்பட்டிருந்தது.