இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் கூடிய பல நோய்கள் பரவி வருவதால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 02 நாட்களுக்குப் பின்னரும் மருத்துவரை சந்திக்க தாமதம் ஏற்பட்டால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாத்தியமுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சில நோயாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக வைத்தியரை நாடாமல், தமது சொந்த அல்லது தமது குடும்ப உறுப்பினர்களின் கருத்திற்கு அமைய இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதைப் புறக்கணிப்பதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.

You missed