எல்லோர் மனதிலும் இடம் பிடித்த பற்றிமாவின் அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்களுக்கு பிரியா விடை!

-கேதீஸ்-
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபர்களின் வரிசையில் மிகச் சிறந்த சேவையை கடந்த 2017 -2023 வரை வழங்கிய அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு அவர்கள் தனது சேவைக் காலம் முடிந்து இடமாற்றம் பெற்றுச் செல்கிறார்.

அவருக்கான பிரியாவிடையும் கௌரவிப்பும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

ஒரு பாடசாலையின் அதிபர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கியவர்.
அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு.

பாடசாலை கல்வியிலும் மாணவர்களின் சமூகமட்ட முன்னேற்றத்திலும் துணிச்சலும் முன்மாதிரியான சிந்தனையுடன் செயற்பட்டவர்.

அருட்சகோதரர் சந்தியாகு அவர்கள் கார்மேல் பற்றிமா பாடசாலையில் கடமையாற்றிய இந்த காலத்தை பாடசாலை சமூகம் மாத்திரமல்ல இந்த பிரதேசமே என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும்.

அருட் சகோதரர் எஸ். சந்தியாகு அவர்கள் இந்த நாட்டின் எந்த பிரதேசத்தில் கடமையாற்றினாலும் கடவுளின் ஆசிர்வாதத்துடன் மேலும் பல காலம் அவரின் சேவைகள் எமது சமூகத்திற்கு கிடைக்க வேண்டும்.