இப்போது இந்தியா ஒரு தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கொண்டுள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் சீனா எதிர்ப்பு என்று கூறினால் அது அங்கு அரசியல்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரை பொறுத்த வரையில் ராஜ்நாத் சிங் இந்தியாவின் கடற்படை புலனாய்வுத்துறையிடம் இருந்து பெற்றுக் கொண்ட 12 பக்க அறிக்கையை இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஊடாக மோடிக்கு அனுப்பியதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால் அம்பாந்தோட்டை துறைமுகத்தை போல ஏறத்தாழ 45 ஏக்கர் விஸ்திரமுள்ள பரப்பை 99 வருட குத்தகைக்கு சீனா எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

You missed