அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு கழகத்தின் அனுசரணையில் தரம் 5 மாணவர்களுக்காக நடாத்தப்பட்டு வகுப்புகளில் பயின்று 2022 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளி பெற்ற 17 மாணவர்கள் உட்பட அவ்வகுப்பில் கலந்துகொண்ட 206 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி திங்கட்கிழமை அமைப்பின் தலைவர் கலாபூஷணம் கா சந்திரலிங்கம் அவர்களின் தலைமையில் சேனைக்குடியிருப்பு கணேச மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு கழக ஐக்கிய ராஜ்ய தலைவர் வைத்திய கலாநிதி தியாகராஜா பெரியசாமி அவர்களும் முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட நிரதிய அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் அவர்களும் ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ பத்மநிலோஜன் குருக்கள் அவர்களும் மா கௌரவ அதிதியாக நாவிதன்வெளி கோட்ட கல்வி பணிப்பாளர் பூ.பரமதயாளன் மற்றும் கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து அம்பாறை மாவட்ட விபுலானந்த புணர்வாழ்வு செயலாளர் ஓய்வுநிலை உதவி கல்வி பணிப்பாளர் கணவரதராஜன் பிரதி தலைவர் ஓய்வு நிலை பொறியாளர் ரி.சர்வானந்த அமைப்பின் பொருளாளர் முன்னாள் மாநகர சபை கே.செல்வராஜா மற்றும் சிறப்பு அதிதிகளாக பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.