கோப்பாய் அரசினர் ஆசிரியர் கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை .

செல்லையா பேரின்பராசா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் மாசி உத்தர நட்சத்திர நாளான இன்று 04.03.2026 புதன்கிழமை 

 திருவள்ளுவர் குருபூசை வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இக் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் 

முதல் நிகழ்வாக கலாசாலை வளாகத்தில் அமைந்திருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பெற்றும், மலர் வணக்கம் மேற்கொள்ளப்பட்டும் மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி  முன்னாள் விரிவுரையாளரும் தமிழ் அறிஞருமாகிய கந்தையா தர்மராஜா அதிதி பேச்சாளராக கலந்துகொண்டு வள்ளுவத்தைப் போற்றுவோம் என்ற கருப் பொருளில் உரை ஆற்றினார்.

இந்நிகழ்வுகளை இரண்டாம் வருட  ஆங்கிலநெறி ஆசிரிய மாணவி தனுஷாயினி தேவராஜா முன்னிலைப்படுத்தினார்.

திருவள்ளுவர் பற்றி ஆசிரிய மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணக் காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.

கல்வி எனும் அதிகாரத்தை பாவோதல் வடிவில் ஆரம்பக்கல்வி ஆசிரிய மாணவி ஜெயராணி தினேஷ் வழங்கினார்.

அதிதி அறிமுக உரையினை தமிழ்த்துறை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் ஆற்றினார்.

திருவள்ளுவம் காட்டும் பெண்மை பற்றிய உரையினை ஆங்கில நெறி ஆசிரிய மாணவி கௌசியா நிரோஷன் வழங்கினார் .

ஈழமும் வள்ளுவரும் என்ற பொருளை முதன்மைப்படுத்தி கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் நிறைவுரை ஆற்றினார்.

அதிதி பேச்சாளர் கலாசாலை முகாமைத்துவக் குழுமத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.