கடந்த 24ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடியிருந்தார்.

கொண்டாட்ட நிகழ்வின் போது பிரபல அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

எனினும் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்வதை மகிந்த புறக்கணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கலந்து கொள்ளாமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.