இலங்கை ரூபாவின் பெறுமதி காலத்திற்கு காலம் மாறுபடும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் செயற்கையான முறையில் ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வரும் பின்னணியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கான கேள்வி நிரம்பலின் அடிப்படையில் ரூபாவின் பெறுமதி காலத்திற்கு காலம் மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெஹியோட்ட பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் தொடர்ந்தும் டொலர் கையிருப்பு தொடர்பில் நெருக்கடி நிலைமை நீடித்து வருவதனை ஏற்றுக் கொள்வதாகவும், குறைந்தபட்சம் 5 பில்லியன் டொலர்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.