தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துறைமுகம், ரயில்வே, தபால், இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நாட்டுக்கு நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக நாள் ஒன்றில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 10 பில்லியன் ரூபா எனத் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ஏற்பட்ட நட்டத்தை துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்ததாக குறித்த அதிகாரி தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.