அவுஸ்ரேலியாவில் மே மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள பெடரல் தேர்தலில் தமிழர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கிரீன் கட்சி சார்பாக சுஜன் என்ற தமிழ் இளைஞர் தேர்தலில் களமிறங்கப்பட்டுள்ளார்.

தமிழர்களுக்கு முழு ஆதரவு

அவுஸ்ரேலியாவில் மனித உரிமை செயற்பாடு, இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான செயற்பாடு மற்றும் குடிவரவு குடியகல்வு செயற்பாடுகளில் தமிழர்களுக்கு முழு ஆதரவை வழங்கி வரும் சுஜன், சிட்னி மாநில தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அதிக தமிழர்களைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா மாநிலத்தில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் சுஜன் சிறந்த சமூக, மனித உரிமை செயற்பாட்டாளராகவும் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் 15 வயதில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து, ஆஸ்திரேலியாவில் வதிவிடத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரீன் கட்சி

குறித்த இளைஞர் 2015 ஆம் ஆண்டு முதல் கிரீன் கட்சியில் பல தேர்தல்களில் களமிறங்கியுள்ளார்.

கிரீன் கட்சியானது சமூக நல செயற்பாடு, மனித உரிமை செயற்பாடு மக்கள் நலன் திட்டங்களை முன்னெடுக்கும் ஒரு கட்சியாக திகழ்கின்றதால் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு குரலாக தான் அதில் களமிறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு புலம்பெயர்ந்துள்ள மக்களது பிரச்சினைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.