இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (02.03.2023) காலை 6.05 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

பெசிசிர் செலாடன்(தென் கடற்கரை) மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே 36 கிமீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 82 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது அருகில் உள்ள ஜம்பி மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது. அத்துடன், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117