இந்தியாவில் பாரிய அளவிலான நிலடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்புள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வட பகுதிகளில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவு கோலில் 8ஆக பதிவாகக்கூடிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அப்படி ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டால் இலங்கையில் கொழும்பும் நிச்சம் பாதிக்கப்படும் எனவும், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வட பகுதியில் ஏற்பட்ட 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் கொழும்பின் கட்டடங்கள் குலுங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.