கொழும்பின் புறநகர் பகுதியான பாதுக்க பிரதேசத்தில் பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுமி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 15ம் திகதி 15 வயது மாணவி ஒருவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டு உயிரிழந்தார்.

தரம் 10 இல் கல்வி கற்கும் நிசலி லோசதி கிரிவெந்தல என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.

கடந்த 03ஆம் திகதி மேலதிக வகுப்புக்குச் சென்றுவிட்டு நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, ​​மேகொட பாதுக்க வீதியில் வத்தரக புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியில் மோதி படுகாயமடைந்துள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மகளின் இதயம், சிறுநீரகம், நுரையீரல், கண்கள் உள்ளிட்ட எட்டு உடல் உறுப்புகள் மேலும் பலருக்கு தானமாக வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.