நற்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் இடம் பெற்ற மகா சிவராத்திரி நிகழ்வு

மகா சிவராத்திரியை முன்னிட்டு நட்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலையின் பங்குபற்தலுடன் மாணவர்களுக்கான சமயப் போட்டி நிகழ்வும்,மகா சிவராத்திரி கலை நிகழ்வுகளும் நட்பிட்டிமுனை கணேசர் ஆலயத்தில் கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் ஆலய தலைவர் தம்பிராஜா ரவிராஜ் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.

சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வுகள் அறநெறிப் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள், ஆலய நிருவாகத்தினர் இந்து இளைஞர் மன்றத்தினர் மற்றும் அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியர் ஜெனிதா மோகன் ஆகியோரின் பூரண பங்களிப்புடன் நடைபெற்றது.

இதில் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கந்தன் சுஜித்ரா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

.