நியூசிலாந்து நாட்டில் வெலிங்டன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணியளவில் ரிக்டர் அளவில் 6.1ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.