(கனகராசா சரவணன்)

அக்கரைப்பற்றி அப்பிள் கடை ஒன்றில் ஜயாயிரம் ரூபா போலி நாணையத்தாளை வழங்கி அப்பில் வாங்க முயற்சித்த அட்டாளைச்சேனையைச் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உட்பட இருவரை வியாழக்கிழமை (9) கைது செய்யப்பட்டதுடன் மூன்று ஜயாயிரம் ரூபா போலி நானையத்தாள்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது, அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சோந்த பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விகற்றுவரும் 24 வயதுடைய மாணவன் அவரின் 24 வயதுடைய நண்பனுடன் சம்பவதினமான பிற்பகல் அக்கரைப்பற்று கல்முனை வீதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள அப்பில் கடைக்கு சென்று அப்பிளை வாங்கிவிட்டு 5 ஆயிரம் ரூபா தாள் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து கடை உரிமையாளர் இது போலியான தாள் என்பதையறிந்து உடனடியாக பல்கலைக்கழக மாணவனை மடக்கிபிடித்து பொலிசாரிம் ஒப்படைத்ததுடன் அவருடன் வந்த நண்பன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அவரை பொலிசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனிடம் இருந்து மேலும் இரு 5 ஆயிரம் ரூபா போலி தாள்கள் உட்பட மூன்று 5 ஆயிரம் ரூபா போலி நாணையத்தாள்களை மீட்டுள்ளதாகவும், இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117