13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வீதிக்கு இறங்கிய பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமார் சில 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்துவ சந்தியில் காவல்துறையினருக்கு பௌத்த பிக்குகள் குழுவொன்றுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்திற்கான வீதியை பொலிஸார் மறித்துள்ளதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமார் பொலிஸாருடன் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதை ஒட்டி, ஐக்கிய பிக்கு முன்னணியினர் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பலர் வெலிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.