இந்திய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் முரளிதரன் இன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இன்று இலங்கை வருகை தரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார்.

இரு தரப்பு உறவை வலுப்படுத்தல்

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ள நிலையில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாளைய தினம் இலங்கையில் நடைபெறவுள்ள 75ஆம் ஆண்டு தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் அமைச்சர் முரளிதரன் பங்கேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.