(கனகராசா சரவணன்)

மாத்தறை தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் பத்திரன புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக் மருத்துவ மருந்துவகைகள் மற்றும் கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கில் நடைபயணமாக இலங்கையை சுற்றியவரும் நடைபயணம் கடந்த டிசம்பர் 31 கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பித்து இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பை வந்தடைந்தார்.

மட்டக்களப்பை இன்று வந்தடைந்த சுகத் பத்திரன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் வரைவடத்தின்படி கரையோரமாக இலங்கையை சுற்றிவருவதுடன் அந்த நடபயணத்தில் கிடைக்கும் நன்கொடைகளை கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு மருந்துகள் அடங்கி பொதியை வழங்கவுள்ளதாகவும் இதற்கு முன்மாதிரியாக தனியாக இந்த சுற்று பயணநடையை கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த டிசம்பர் 31 ம் திகதி ஆரம்பித்து அலாவத்தை புத்தளம் கல்பிட்டி நொச்சியாகம ஊடாக தலைமன்னார் சென்று அங்கிருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் பருத்தித்துறை சென்று அங்கிருந்து பரந்தன் முல்லைத்தீவு திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு இன்று திங்கட்கிழமை (30) 1200 கிலோமீற்றர் தூரம் நடையாக வந்தடைந்துள்ளேன்.

இங்கிருந்து அக்கரைப்பற்று பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை கதிர்காமம் சென்று அங்கிருந்து மாத்தறை ஊடாக 2 ஆயிரத்து 200 கிலோமீற்றர் தூரத்தை கொண்ட இலங்கையை சுற்றிவரும் நடைபயணம் கொழும்பு காலிமுகத்திடலை சென்றடையவுள்ளதாகவும் கல்வி உபகரணங்ம் தேவைப்படும் பாடசாலை மாணவர்கள் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டதுடன் நடைபணம் ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை தனக்கு மக்கள் ஆதரவு வழங்கிவருவதாகவும் இதில் இனையவிரும்பியோர் தன்னோடு இணைந்து பயணிக்கலாம் என அவர் தெரிவித்தார்.