தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தேர்தல் பணிகள் தொடரும் என ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கைவிடப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்காக கோரப்பட்ட பணம் கிரமமான முறையில் கிடைக்கப் பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

பதவி விலகியதாக அறிவிக்கவில்லை

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி விலகியதாக ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அவர் பதவி விலகியதாக ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமையில் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூட்டமொன்றை நடத்த உள்ளதாகவும், அதில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வாட்ஸ்அப் வழியாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.