நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த 2022 டிசம்பர் மாத இறுதியில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 1896 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

கடந்த 2022 நவம்பர் மாத இறுதியில் 1806 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது.

டிசம்பரில் டொலர் கையிருப்பு உயர்வு

இதேவேளை, வெளிநாட்டு நாணயக் கையிருப்பானது கடந்த நவம்பர் மாதம் 1733 மில்லியன் டொலர்களாக காணப்பட்டதுடன், டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1862 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.